குவைத் அந்தலுஸ் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் கடந்த  30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்மா தொழுகைக்குப் பிறகு குவைத் மண்டல அந்தலுஸ் கிளையின் இலவச மலர் வெளியீடு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிளைத்தலைவர்  சேக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மண்டல பேச்சாளர் சகே.சிராஜ்தீன் ஃபிர்தௌசி “சுவனம் செல்லும் பாதை“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர்  “சுவனம் செல்லும் பாதை“ இலவச மலரை குவைத் மண்டல தலைவர் ராஜா செரிஃப் வெளியிட அந்தலுஸ் கிளை செயலாளர் ஹுசைன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.வந்திருந்த அனைவருக்கும் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

“சுவனம் செல்லும் பாதை“ இலவச மலரில் குவைத் மண்டல தாயி முஹிபுல்லாஹ் உமரி, சகோ.அப்துல் கரீம் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் எழுதிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றள்ளது.

இந்த இலவச மலர் மிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அனைவரும் சொன்னது இது போன்று பல மலர்களை வெளியிட தூண்டவதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்..