குவைத் ஃபிண்டாஸி பகுதியில் எளிய மார்க்கம்

குவைத் மண்டலம் ஃபஹாஹீல் பகுதியிலுள்ள ஃபிண்டாஸ் எனும் ஏரியா மூன்றிலுள்ள கம்யூனிட்டி ஹாலில் கடந்த 26-08-2011 வெள்ளிக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்பிறகு “ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ.சிராஜூதீன் ஃபிர்தௌஸி அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் இஸ்லாத்தை பற்றிய சிறிய அறிமுகம் உரையாற்றினார்.

அடுத்ததாக சகோதரர்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதிஸ் வழியில் பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் குவைத் மங்காஃப கிளை மூலம் திருவண்ணாமலையை சோ்ந்த பாண்டியன் என்ற இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பஷீர் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

அவருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை சகோ.அப்துல் கரீம் அவர்கள் விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை ஃபாஹில் மற்றும் மங்காஃப் கிளையினர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.