குவைத்தில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பார்பாக ரமளான் கடைசி 10 நாட்களில்  சிறப்பு சொற்பொழவு நிகழ்ச்சி ஹவள்ளி பகுதி ஹரிரி ரவுண்டபவுட்டிலுள்ள அமெரிக்கன் கிரியேட்டிவ் அகாடமிக் ஸ்கூலில் நடைபெற்றது.

இதில் குர்ஆன் ஓதுதல் பயிற்சியை தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மேளப்பாளையம் இஸ்லாமிய கல்லூரி துணை முதல்வர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் நடத்தினார்கள்.

பின்ர் சிறிது இடைவெளிக்குப்பிறகு சகோ.அப்துல் கரீம் அவர்கள் “அமல்களும் அழகிய சொர்க்கமும்” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்.

சொற்பொழிவில் வழியுறுத்தப்பட்ட சிறிய சிறிய திக்ருகள் மற்றும் கடைசி பத்தில் ஓத வேண்டிய துவாக்கள் பெரிய போஸ்டராக மஸ்ஜிதில் பல பகுதிகளில் ஒட்டபட்டது மேலும் நோட்டிஸ்களாகவும் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சகோ.அப்துல் ரஜாக் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய உதவினார்கள். அல்ஹமதுலில்லாஹ்.