குவைத்தில் ரமளான் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த ஆண்டு ரமலான் மாதம் கடைசி பத்து இரவில் மக்கள் லைலத்துல் கத்ரு இரவின் பயனை அடையவேண்டும் என்பதற்காக ஹவல்லி பகுதியிலுள்ள மதாம் கனாரி எதிரேயுள்ள ரிஹேபிலேசன் பள்ளி வளாகத்தில் பத்து நாளும் இரவு தொழுகை மற்றும் பயான் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தினமும் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் ஒற்றைப்படை இரவுகளில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த இரவு நிகழ்ச்சியில் “அமல்களை பேனுவோம்“ என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.

பயானுக்குப் பிறகு மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.