தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 4ம் தேதி நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது.
இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும், குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முகாமில் 130க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.