குவைத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!

2711200905327112009054குவைத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழிப்படி குவைத் அப்பாசியாவில் உள்ள இந்தியன் செண்ட்ரல் பள்ளியின் கூடை பந்து விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது.நம் சகோதரர்கள் நபி வழிப்படி திறந்தவெளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல சிரமங்களுக்கும் மத்தியில் குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாத்தினர் இந்தநிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

குவைத் மண்டல தாயி சகோ:முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் ஆற்றிய உரை வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.திரளான பெண்களும் முன்னூறுக்கும்
மேற்ப்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.

அதுசமயம் சென்ற வாரத்தில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் அஷ்ரபாக மாறிய கடலூர் ராஜாவையும்,
சித்திக்காக மாறிய திருவாரூர் வேலுவையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டிற்க்கு மண்டல நிர்வாகத்தின் கீழ் சகோதரர்கள் நாமக்கல் ஹாஜா,கூத்தாநல்லூர் சித்திக்,மேலப்பாளையம் சலாவுதீன்,பெரம்பலூர் சிராஜ்,மற்றும் நாமக்கல் இப்ராஹிம்ஷா ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!