குவைத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

p9180280p9180276p918028320-09-2009 (ஞாயிற்றுக்கிழமை)அன்று குவைத் அப்பாஸியாவில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் திடலில் ஈதுல் பித்ர் தொழுகை டி.என்.டி.ஜே குவைத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது.

வளைகுடா நாடுகளில் பெருநாள் தொழுகை அதுவும் திடலில் நடத்துவது என்பது சாதாரணமான விசயமில்லை.

இருப்பினும் பல சோதனைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இவ்வாண்டும் நபிவழியில் பெருநாள் தொழுகை திடலில் ஏற்பாடு செய்து அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடைபெற்றது.

பெருநாள் தொழுகை முடிந்த பின்பு மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்.

சிட்டியை விட்டு தொலைவில் இருந்தும் சிரமம் பார்க்காமல் ஆண்கள் பெண்கள் உட்பட 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அல்ஹம்துலில்லாஹ்.