குவைத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல செயற்குழு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பயான் கத்தா 9ல் உள்ள மர்யம் பள்ளியில் வெளிப்புற முள்ள அறையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

இதில் குவைத் மண்டலத்திலுள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இச்செயற்குழுவில் சகோ.பி ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் ஆன்லைன் மூலம் தனிநபராக சமுதாயப்பணி செய்வதற்கும் அமைப்பாக சமுதாயப்பணி செய்வதற்கும் உள்ள வித்தியாசங்களையும் மற்றும் சமுதாயப்பணி செய்வதற்கு ஒரு அமைப்பை எவ்வாறு தோ்ந்தெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார்.