குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!24-07-2009 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் குவைத் மண்டல தலைவர்; ராஜா அகமது ஷரீஃப் தலைமையில் பயான் – முஸ்ரிப் கிளை சார்பில் பயான் மர்யம் பள்ளிவாசலில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயான் முஸ்ரிப் கிளையின் செயலாளர் ஜியாவுதீன் வரவேற்புரையாற்றினார். மார்க்கம் சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்கமளித்தார். 30 பெண்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை டிஎன்டிஜே பயான் முஸ்ரிப் கிளையினர் சிறப்பாக செய்திருந்தார்கள். தொண்டரணி தலைவர் நாமக்கல் ஹாஜா தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக பணியாற்றி தேவைகளை பூர்த்தி செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.