குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

கடந்த 10-09-2010 வெள்ளிக்கிழமை பெருநாளன்று குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் குவைத் TNTJ சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் ஜின்னா வரவேற்புரையாற்றினார்கள். மேலும் மண்டலத் தலைவர் ராஜா முஹம்மது அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்கள். பிற சமய சகோதரர்களின் கேள்விகளுக்கு மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள்.

250 பிற சயம சகோதரர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும் ”பயங்கரவாதிகள் யார்” என்ற குறுந்தகடும் ஃபாஹில் கிளை சார்பாக குளிர்பானமும் வழங்கப்பட்டது.

மேலும் குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபி (ஸல்) என்ற நூல் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை மண்டல தொண்டரணி சிறப்பாக செய்திருந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இறுதியாக குவைத் மண்டல தாயி சகோ முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!