குவைத்தில் நடைபெற்ற இரண்டாவது மாபெரும் இரத்ததான முகாம்

kuwait_blood_mugam_2kuwait_blood_mugamகடந்த 12-12-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் இரண்டாவதாக மாபெரும் இரத்த தான முகாமை குவைத் ஜாப்ரியாவில் உள்ள மத்திய இரத்த வங்கியில் நடத்தியது.

அதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். ஆனால் நேரமின்மையின் காரணமாக 160 பேர்களே இரத்த தானம் செய்ய முடிந்தது. இதில் நமது கொள்கை சகோதரர்கள் மட்டும் இன்றி மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு குறுதி கொடை அளித்தது தகோதரத்துவம் மேலோங்கி நிற்பதை காட்டியது.

கடல் கடந்து பிழைப்புக்காக வந்த இடத்தில் மனித நேயம் மிக்க இரத்த தானம் செய்வதற்கு இவ்வளவு ஆர்வமாக வந்த மக்களைக் கண்டு இரத்த வங்கி ஊழியர்கள் திகைத்து நின்றனர்.