குவைத்தில் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தில் கடந்த 28-05-2010 வெள்ளிக்கிழமை “சுய தொழில் செய்வோம் சொந்தங்களோடு வாழ்வோம்“ என்ற மாபெரும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை அஸர் தொழுகைக்குப்பின் சரியாக 3.50 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.

முதல் நிகழ்ச்சியாக குவைத் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ உமரி அவர்கள்  “இம்மைக்காக மறுமையை மறக்கலாமா?“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகோ.பிஜே அவர்கள் “மன அழுத்த தீர்வு“ விளக்கவுரை ஆரம்பமானது. ஆரம்பத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டது.

ஆரம்பித்து 10 நிமிடத்திற்குள் மக்கள் வரத்து அதிகமானதால் முன்பகுதியில் தரையில் விரிப்பை விரித்து அதில் அமர வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட சுமார் 620க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

சகோ.பிஜே அவர்களனின் உரை வந்திருந்த அனேக பேரின் மனஅழுத்தத்தை 50 சதவீதம் குறைத்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் இறுதியில் சகோ.பிஜே அவர்கள்  ஜூலை மாநாடு பற்றி சுருக்கமாக உரையாற்றினார்

அதனைத் தொடர்ந்து  “சுய தொழில் செய்வோம்“ என்ற தலைப்பில் மாணவரனி செயலாளர் சகோ.சித்திக் அவர்கள்  பல ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்களின் கருத்து இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் நடத்த வேண்டும் மொத்தத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் தான் நம் சமுதாயத்தை விழிப்புணர்வு பெற செய்து விட்டதாக  கூறிச்சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்ச்சியில் தொண்டரணி செயலாளர் நாமக்கல் காஜா தலைமையில் தொண்டர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!