குவைத்தில் கை கால் செயலிழந்து தவித்த தமிழ்நாட்டு பெண்- காப்பாற்றி தாய்நாட்டிற்கு கொண்டு வந்த குவைத் TNTJ – அல்ஹம்துலில்லாஹ்!

குவைத்தில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு வந்த நாகை மாவட்டம் ஏனங்குடியை சேர்ந்த ஹாஜி பஜ்ரியா என்ற பெண் இரண்டு கால் இரண்டு கைகள் செயலிழந்த நிலையில் தனது முதலாளியால் கைவிடப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதற்கிடையில் ஒரு வீட்டில் ஹவுஸ் பாயாக வேலை செய்து கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் குவைத்திற்கு புதிதாக வந்தவர் என்பதால் செய்வதறியாது. இங்குள்ள பல அமைப்புகளிடமும், ஊர் ஜமாத்துகளிடமும் முறையிட்டு காலம் கடந்தது தான் மிச்சம். இதற்கிடையில் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமடைந்து கொண்டே போனது.

இந்த விசயத்தில் ஏனங்குடியை சேர்ந்த சகோ இத்ரிஸ் மற்று அமீர் இருவரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருந்தனர் இருந்த போதிலும் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்ததாலும் அந்த பெண்ணின் கணவருக்கு அவரது முதலாளி விடுமுறை கொடுக்காததாலும் செய்வதறியாது இந்த பிரச்னையை குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாத்திடம் கொண்டு வந்தனர்.

நடந்த விசயத்தை ஆரம்பம் முதல் கேட்டு தெரிந்து கொண்ட மண்டல நிர்வாகிகள், இது போன்ற விசயத்தில் அதிக அனுபவம் உள்ளதால் பாதிக்கப் பட்ட பெண்ணை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான எந்த முயற்சியுமே இதுவரை எடுக்கப் படாததையும் அந்த பெண் குவைத் குற்றவியல் சட்டப்படி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர்.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த மண்டல நிர்வாகிகள் உடனே அந்த பெண்ணின் கணவர் வேலை செய்யும் அந்த வீட்டு முதலாளியிடம் சென்று நிலைமையை எடுத்து சொல்லி நீண்ட வாக்குவாதத்திற்கு பின் அந்த பெண்ணின் கணவரின் பாஸ்போட்டை கைப்பற்றிக் கொண்டனர்.

பிறகு அந்த பெண் வேலை பார்த்த வீட்டு முதலாளியிடம் சென்று பேசியபோது கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் உடனே அந்த பெண்ணை நாட்டிற்கு அனுப்பிவையுங்கள் இல்லை என்றால் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவேன் என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண்ணை நாட்டிற்கு அனுப்புவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லையே. அதில் இருந்த சட்ட சிக்கலை சரி செய்யும் வேளையில் தொடர்ந்து பதி மூன்று நாட்களாக மண்டல தலைவர் ராஜா சரீபும், பொருளாளர் சம்சுதீன் மற்றும் செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களும் தீவிரமாக இறங்கினர். அல்லாஹ்வின் பேருதவியால் மண்டல தலைவர் ராஜா சரீப் அவர்களின் சொந்த பொறுப்பில் பிணையத் தொகையை செலுத்தி. சகோதரி பஜ்ரியா , அவரது கணவர், மற்றும் ஒரு ஒரு செவிலிப் பெண்ணிற்கு போய் வர விமான சீட்டு எடுக்கப்பட்டு நாட்டிற்கு அனுப்பிவிட ஏற்ப்பாடு செய்யப்பட்டு விமானம் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால்  அந்த பெண்ணின் உடல் நிலை விமானத்தில் பயணிப்பதற்கு ஏதுவாதாக இல்லை என்று பயணத்தை ரத்து செய்தனர், விமான நிலைய அதிகாரிகள்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் கணவர் எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளது. அவர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டுமானால் நாங்கள் இருவரும் வெளிநாட்டில் சென்று பொருளீட்டினால் தான் அது சாத்தியாகும் என்று இங்கே வந்தோம். இங்கு எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது என் மனைவி மரணத்தின் விழும்பில் இருக்கிறாள் அதற்கிடையில் எங்கள் பிள்ளைகளை பார்த்து விடலாம் என்றால் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கண் கலங்கினார்.

அவருக்கு ஆறுதல் சொன்ன மண்டல நிர்வாகிகள் கொஞ்சமும் சோர்வில்லாமல் சகோதரி பஜ்ரியாவையும் அவர் கணவரையும் அவசர ஊர்தியில் மருத்துவமனையில் அனுமதி பெற்று அங்கே அனுப்பி வைத்தனர். மறுநாள் காலையில் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சகோதரி பஜ்ரியா சிகிச்சை பெற்ற மருத்துவ மனையின் இந்திய மருத்துவர் சேகர் அவர்களின் உதவியோடு. மறுநாள் பயணம் செய்ய அனுமதி பெற்றனர்.

ஆனால் முதல் நாள் இவர்களோடு பயணம் செய்ய இருந்த செவிலிப் பெண் மறுநாள் மறுத்து விட்டார் இந்நிலையில் அந்த பெண்ணோடு இரண்டு பேர் பயணம் செய்ய வேண்டும் என்பது விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவு என்பதால் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அபு சாலி அவர்கள் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவசர விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்களோடு பயணிக்க சம்மதித்தார்.

மறுநாளும் ஓய்வில்லாமல் சகோதரியை அவசர ஊர்தியில் ஏற்றிக் கொண்டு விமானம் நிலையம் சென்றனர் நிர்வாகிகள் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்ற பதட்டம் மட்டும் நிர்வாகிகள் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. எல்லோரும் துவா செய்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களின் துஆ வை ஏற்றுக் கொண்டான் ஆம் இவர்களின் முயற்சி வீண் போக வில்லை.விமான நிலையத்தின் எல்லா சோதனைகளையும் முடித்து விமான நிலையத்திற்குள்ளே அனுப்பி வைக்கும்போது கால் கை செயலிழந்து பேசும் திறனையும் கடந்த இரண்டு மாதங்களாக இழந்து நிற்கும் அந்த சகோதரியின் முகத்தில் ஒரு புண் சிரிப்பு அது போதுமே நமக்கு. இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக விமானம் புறப்படும் வரை காத்திருந்த நாம் விமானம் புறப்பட்டதை அங்கிருந்த அறிவிப்புப் பலகை காட்டியதும் ஒருவருக்கொருவர் கை குலிக்கிக் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக அங்கிருந்து புறப்பட்டோம்.

இந்த சம்பவத்தை கேள்விப் பட்ட நம் சகோதரர்கள் இந்த சகோதரிக்காக பொருளாதார உதவியும் செய்தனர். அந்த வகையில் ரூபாய் 275000 இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் திரட்டப் பட்டது. இந்த தொகை பாதிக்கப் பட்ட பெண்ணின் ஊரை சேர்ந்த சகோ இத்ரீஸ் மற்றும் அமீர் அவர்களின் முன்னிலையில் கணக்கு சரி பார்க்கப் பட்டு மாநில தலைமை மூலம் அந்த குடம்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இத்தோடு நம் பனி நிற்கவில்லை சென்னை விமான நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அவசர ஊர்த்தியோடு இவர்களுக்காக காத்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் அருகில் தாம்பரத்தில் உள்ள மருத்துவ மனையில் சகோதரியின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு. மீண்டும் அவர்களை பாது காப்பாக வீடு வரை கொண்டு சென்று விட்டனர். அதுவரை குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அபு சாலி அவர்கள் உடனிருந்தார்.

இவ்வளவு வேலையும் செய்து முடித்து விட்டு மறுநாள் அந்த பெண் தங்கியிருந்த மருத்துவ மனைக்கு ஒரு ஃபைலை வாங்கி வருவதற்காக சென்ற நம் நிர்வாகிகளிடம் அங்கு பனி புரியும் செவிலிப்பெண்களும் மருத்துவர்களும் அந்த பெண்ணின் பயணம் பற்றி உற்சாகமாக கேட்டுத் தெரிந்துக் கொண்டனர்.

அதற்கிடையில் ஆமாம் அந்த பெண் உங்கள் ஊரா? உங்களுக்கு சொந்தமா என்று கேட்டனர் அதற்கு நாம் நமக்கும் அந்த பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் அந்த பெண்ணை நமக்கு யார் என்றே தெரியாது செய்தி கேள்விப் பட்டு நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யவே வந்தோம் என்றோம் அதைக் கேட்ட அவர்கள் கண் கலங்கி விட்டனர்.

நம் அலுவலக பணிகளுக்கிடையே ஏதோ நம்மால் ஆனா சமுதாயப் பனி அல்லாஹ்வுக்காக. அல்லாஹு அக்பர்.