குவைத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

கடந்த 21 மே 2010 வெள்ளிக்கிழமை குவைத் ஃபாஹில் பகுதி மங்காஃப் கிளை சார்பாக மங்பாஃபிலுள்ள Teachers Society யில் அஸர் தொழுகைக்குப்பிறகு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்“ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் கிளைத்தலைவர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்ற மண்டல தாயி சகோ.சிராஜ்தீன் ஃபிர்தௌஸி ஏன் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி? என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள். பின்னர் கேட்கப்பட்ட  20 கேள்விகளுக்கு மண்டல தலைமை தாயி சகோ.முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் எல்லோருக்கும் விளங்கும் விதமாக மிக எளிமையாக குர்ஆன் ஹதிஸ் வழியில் பதிலளித்தார்கள்.

துனைத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

கிளைச் செயலாளர் முஹம்மது கஸ்ஸாலி மற்றும் பொருளாளர் முஹம்மதலி தலைமையில் தொண்டர்கள் வந்திருந்த அனைவரையும் மிக சிறப்பாக உபசரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!