குவைத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாபாக 27-08-2010 வெள்ளிக் கிழமை அசர் தொழுகைக்குப்பின் பயான் பகுதியிலுள்ள மர்யம் பள்ளிவாசலில் “ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்“ எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துக்கொண்டு சகோதரர்களின் கேள்விகளுக்கு குர்ஆன் ஹதிஸ் படி விளக்கமளித்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் பயான் மிஸ்ரஃப் கிளையினர் இஃப்தார் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இம்மாபெரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் உட்பட 650 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!