குவைத்தில் அந்தலூஸ் கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

181220090981812200909218122009096கடந்த 18-12-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மார்க்க சொற்ப்பொழிவு அந்தலோசில் உள்ள மஸ்ஜிதுன் அமீரியில் வெகு சிறப்பாக நடைப் பெற்றது.

நபி வழியா? புது வழியா? என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் MISc அவர்கள் சிர்க்,கந்தூரி,கூட்டு,துவா,முறையற்ற தொழுகை,மீலாது விழா,மிஹ்ராஜ்,பராத்,மௌலூது,போன்ற புதுமைகளை பட்டியலிட்டு இவையெல்லாம் நம்மை வழிகேட்டில் கொண்டு சென்றிருக்கும் விஷயங்கள் என்பதை அழகாக தெளிவுபடுத்தினார்.

வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனுற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.