குவைத் மிர்காப் பகுதியில் குவைத் மண்டலச் செயற்குழு

கடந்த ரமலானில் கடுமையாக உழைத்த கிளை நிர்வாகிகளின் சிறிது ஓய்வுக்குப்பிறகு கடந்த 08-10-2010 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு குவைத் மிர்காப் தலைமை மர்கஸ் அருகில் உள்ள மண்னுசல்வா ஹோட்டலில் குவைத் மண்டல செயற்குழு தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி தலைமையில் குவைத் மண்டல செயற்குழு நடைபெற்றது.

மண்டல தலைவர் ராஜா அஹமது சரிஃப் அவர்கள் ரமலான் நிகழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது இதற்கு கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் அயராது உழைத்ததற்கு நன்றி தெருவித்தார்.

அடுத்து செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் புதிய கிளைகளின் உதயம், மண்டலத்தின் இரண்டாவது மர்கஸ் ஃபாஹில் பகுதியில் திறந்தது மற்றும் பெண்கள் நிகழ்ச்சி நடத்துவது பற்றி அறிவிப்புச் செய்தார்கள். பின்னர் 19 அமைப்புகளின் ஆளுயர போஸ்டரைப்பற்றி விளக்கினார்.

அடுத்து மண்டல பொருளாளர் புதுக்கோட்டை சம்சுதின் அவர்கள் ரமலான் வரவு செலவு விபரங்களையும் தெரிவித்தார்கள்.

இச்செயற்குழுவிற்கு 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.