குவைதில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தில் கடந்த 23-04-2010 வெள்ளியன்று அன்று மதியம் ஜூம்மா தொழுகைக்குப் பிறகு பயான்,கத்தா 9ல் உள்ள மர்யம் பள்ளியில் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்“ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பயான் மிஸ்ரஃப் கிளை தலைவர் சகோ.ஜியாவுதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற சகோ.யூசுஃப் உலவி அவர்கள் முன்னுரையாற்றினார்கள்.

பின்னர் சகோ.முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் ஹதிஸ் காட்டிய வழியில் விரிவான விளக்கமளித்தார்.

இறுதியில் கிளைத் துணைத் தலைவர் ஜாஃபர் நன்றியுரையாற்றினார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்)