குவைதில் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்ச்சி

Image0025Image0014Image0024குவைத்தில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் 22-01-2010 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியின் உள்ளரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக கல்வி கருத்தரங்கின் நோக்கம் பற்றி குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் முத்துப்பேட்டை அன்சாரி அவர்கள் தொகுத்து வழங்கினார். குவைத் மண்டல தலைவர் ராஜா சரீஃப் அவர்கள் தலைமை தாங்கினார்.

நமது மனோபலம் வளர்க்கும் திறன் பற்றி தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலமாக சகோ. P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எடுத்து சொல்லிய விதம் வந்திருந்த அனைவரின் மனோ தைரியத்தையும் அதிகப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதைத் தொடர்ந்து நமது மாநில மாணவரணித் செயலாளர் சகோ. சித்திக் Mtech அவர்கள் கல்வியில் நம் சமுதாயம் அடைந்திருக்கும் பின்னடைவையும் அதை போக்கி நாமும் மற்ற சமுதாய மக்களை போல கல்வியறிவு பெற்று தன்னிறைவு பெற்ற மக்களாக மாற வேண்டும் என்பதை மிக அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.

மேலும் கல்வி சம்மந்தமான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார் ஏற்ப்பாடு செய்திருந்த நேரம் முடிந்தும் மக்களின் கேள்விகள் அதிகமாக இருந்ததால் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் பதில் சொல்கிறேன் என்று இன்முகத்தோடு நீண்ட நேரம் பதில் சொன்னது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியாக தாயகத்திலிருந்து வந்திருந்த மாநில பேச்சாளர் அப்துல் கரீம் MISc அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில்
இஸ்லாம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது அதை நாம் எப்படி அலட்சியம் செய்கிறோம் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்.

ஆன்லைன் மூலமான தொழில் நுட்ப விசயங்களை மேலாண்மை குழு உறுப்பினர் இஞ்சீனியர் அப்துல் ஹமீது கவனித்துக் கொண்டார் . அரங்க ஏற்ப்பாட்டை மண்டல தொண்டரணி தலைவர் நாமக்கல் ஹாஜா தலைமையில் கொண்ட குழு கவனித்துக்கொண்டது.

இந்த ஆன்லைன் மூலமான நிகழ்ச்சிக்கு பெண்கள் 70 பேர் உட்பட சுமார் 650 பேர் கலந்து கொண்டது கல்வியின் பால் நமது சமுதாயத்தை திரும்பி பார்க்க வைத்திருப்பதை உணர்த்தியது மட்டுமல்லாமல் நமது ஜமாத்தின் மீது மக்கள் ஒரு பெரிய எதிர் பார்ப்பை வைத்திருப்பது தெளிவாக தெரிந்தது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.