அழைப்புப் பணியில் வண்ணாங்குண்டு கிளையின் புதிய முயற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு , பிறமத சகோதர, சகோதரிகள் ஒரு போஸ்ட் கார்டு அனுப்பினால் அவர்களுக்கு குர்ஆன் அனுப்பி வைக்கப்படுகின்றது .

அதே போல் இராமநாதபுராம் மாவட்டத்தில் உள்ள வண்ணாங்குண்டு TNTJ கிளை, இராமநாதபுரம் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும் பிறமத சகோதர சகோதரிகள் ஒரு போன் செய்தால் போதும் அவர்களது இல்லம் தேடி உலக பொதுமறை திருக்குர்ஆன் ஐ அனுப்பி வைக்கிறது.
இது போன்று கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 32 குர்ஆன் வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இது போன்ற மறுமை வெற்றிக்கு பங்களிக்கக் கூடிய மகத்தான ஏகத்துவபணியில் முன்பைவிட வீரியமாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது பெரியபட்டிணம் TNTJ கிளை. அல்ஹம்துலில்லாஹ்!