கும்பகோணத்தில் நடைபெற்ற மாணவர் அணியின் செயற்குழு கூட்டம்

DSC01864DSC01889DSC01875DSC01864DSC01854தமிழ் நாடு தவ்ஹீத் மாணவர் அணியின் செயற்குழு கும்பகோணத்தில் 26/12/09 அன்று நடைபெற்றது, மாநில மாணவர் அணி செயற்குழுவிற்க்கு மாநில செயலாளர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக் தலைமை தாங்கினார். இதில் மாநில, மண்டல, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாணவர் அணி செயற்குழுவின் முழுச்செலவையும் ஏற்ற TNTJ ஜித்தா மண்டலத்திற்க்கு மாணவர் அணி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை தஞ்சை (வடக்கு) மாவட்ட தலைவர் A.S. அலாவுதீன், மாவட்ட செயலாளர் சகோ.சர்புதீன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

முதலில் மாநில செயலாளர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் மாணவர் அணி நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள், ஒழுக்க நெறிகள், சமூக பொருப்புகள் பற்றி எழுச்சி உரை ஆற்றினார். முதல் உரையே மாணவர் அணி நிர்வாகிகளை புத்துணர்வு பெற செய்தது. பின்னர் மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக் அவர்கள் மாணவர் அணியின் அடிப்படை நோக்கங்கள் பற்றி உரையாற்றினார். பின்னர் மண்டல மாணவர் அணி செயலாளர் H.கலீல் ரஹ்மான் சமுதாய முன்னேற்றத்திற்க்காக மாணவர் அணி ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்கி கூறினார்.

பின்னர் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் N.அல் அமீன் அவர்கள் பத்திரிக்கை துறையில் முஸ்லீம் மாணவர்கள் பங்களிப்பதின் அவசியம் பற்றி விளக்கி கூறினார். பின்னர் மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் K.பஷீர் அஹமது அவர்கள் மாணவர் அணியின் வரவு, செலவு கணக்குகளை சமர்பித்தார். பின்னர் மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் M.அப்துல் பாசித் அவர்கள் மாணவர்கள், இளைஞர்களை எவ்வாறு ஒருங்கினைப்பது என்பது பற்றி விளக்கிகூறினார்.

உணவு இடைவேளைக்கு பின்னர் ஒவ்வொறு மாவட்ட நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினர், மேலும் மாணவர் அணி சிறப்பாக செயல்பட தங்கள் ஆலோசனைகளையும் கூறினர்.

அஸர் தொழுகைக்கு பின்னர் மாணவர் அணியின் சேவையை உலகம் முழுவதும் விரிவு படுத்துவதற்க்கான செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாணவர் அணியின் செயல்பாடுகளை உலகம் முழுக்க வழுப்படுத்த மாணவர் அணி நிர்வாகிகளுக்கு கூடுதல் பொருப்புகள் வழங்கவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கவும் மாநில நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

மாணவர் அணியை இன்னும் ஓர் ஆண்டுக்குள் (இன்ஷா அல்லாஹ் ) 7 நடுகளிலும், இந்தியாவில் 5 மாநிலத்திலும், தமிழகத்தில் 39 மாவட்டத்திலும் வழுப்படுத்த வேண்டும் என மாணவரணி நிர்வாகிகள் ஒரு மனதாக உறுதி பூண்டனர்.

மாணவர் அணியில் பின் தங்கிய மாவட்டங்களில் மாணவர் அணி சேவையை அதிக படுத்த கீழ்க்கானும் மாணவர் அணி நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழக்கப்பட்டது (மாநில பொது செயலாளர் ஒப்புதலுடன்).

i) “தாம்பரம்” K.சித்தீக் – மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்.

ii) S. ஷமீம்.M.Sc – மண்டல மாணவர் அணி செயலாளர் ( பொறுப்பு : வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி (மேற்க்கு), காஞ்சி (கிழக்கு))

iii). H.கலீல்.M.B.A-மண்டல மாணவர் அணி செயலாளர் (பொறுப்பு : கரூர், நீலகிரி, அரியலூர், தேனி, விழுப்புரம் (கிழக்கு), பாண்டி)

iv). M.ஹாஜா.B.E. – மண்டல மாணவர் அணி செயலாளர் (பொறுப்பு: திருச்சி, புது கோட்டை, தஞ்சை (தெற்கு))

v). சகோ.அப்துல் வதூத். B.E (பொறுப்பு: குமரி, கேரளா).

மாணவர் அணியின் செயல்பாடுகள் பற்றியும், சேவைகள் பற்றியும் மாவட்ட நிர்வாகங்களுக்கும், வெளி நாட்டு நிர்வாகங்களுக்கும் விளக்க மாநில தலைமை மூலம் சுற்றறிக்கை அனுப்பட வேண்டும், முஸ்லீம்களை பத்திரிக்கை துறையில் அதிகப்படுத்த நமது ஜமாத்தில் பத்திரிக்கையாளர் அணி ஏற்படுத்தி, மாவட்டம் தோறும் அதற்க்கு நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எல்லா மாவட்டங்களிலும் மாணவர் அணி நிர்வாகிகளுக்கு ஒழுக்கப்பயிற்சி முகாம் (தர்பியா) கட்டாயம் நடத்தப்பட வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் கீழ்க்கானும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (மாநில பொது செயலாளர் ஒப்புதலுடன்).

1. இரங்கனாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் நமது ஜமாத் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும்.

2. முஸ்லீம் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவியை அதிக்கப்படுத்தகோரியும், படிப்பிற்க்கு வட்டியில்ல கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கலை தீர்த்து, எளிதில் வட்டியில்லா கடன் உதவி கிடைக்கச்செய்ய வழிவகை செய்யக்கோரியும் நமது ஜமாத் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும்.

3. லிப்ரஹான் கமிஷன் அறிக்கையில் குறிபிடப்பட்ட அனைத்து இந்து தீவிரவாதிகளையுன் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.

4. “காதல்” என்ற பெயரில் நமது சமுதாய மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்க இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றனர், இதை முறியடிக்கவும், காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை தடுத்திடவும் பிப்ரவரி – 14 தேதியை “கற்புக்கொள்ளையர் தினமாக” அறிவித்து, அன்று “காதல்” என்ற போர்வையில் நடக்கும் சமூக சீரழிவிற்க்கெதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:

scan0002 (1)scan0003 (1)