கும்பகோணத்தில் நடைபெற்ற அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

alnoor01alnoor00alnoor06alnoor05alnoor02TNTJ வின் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கடந்த 18.8.2009 செவ்வாயன்று மாலை கும்பகோணம் ஏ.எம். மஹாலில் நடைபெற்றது.

கல்லூரி தலைமை ஆசிரியை சபுர்நிஷா ஆலிமா “இஸ்லாம் சொல்லும் மகளிர் மேம்பாடு” என்ற தலைப்பிலும், TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. அப்துந்நாசர் “கற்போம்! கற்பிப்போம்!!” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். மாநில துணைத் துணைத் தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி வாயிலாக மார்க்கக் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.

2007-2008 கல்வி ஆண்டில் ஆலிமாப் பயிற்சியை முடித்த 10 மாணவிகளுக்கும், 2008-2009 கல்வி ஆண்டில் ஆலிமாப் பயிற்சியை முடித்த 11 மாணவிகளுக்கும் பட்டயங்கள் வழங்கப்பட்டன. ஆண்கள் – பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.