குமரி மாவட்டம் முழுவதும் ஃபித்ரா விழிப்புணர்வு பிரச்சாரம்

ஃபித்ரா என்றால் என்ன? எனத் தெரியாமல் இருந்த தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஃபித்ரா வழங்குவது அனைவருக்கும் கடமை என்பதை உணர்த்தி அனைத்து முஸ்லிம்களும் நபிவழியில் பெருநாள் கொண்டாடிட ஏற்றவகையில் ஃபித்ராவை வசூல் செய்து வறியவர்களுக்கு வழங்கி வருகின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

அதன் அடிப்படையில் கடந்த 27-08-10 வெள்ளிக்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் அனைத்து மக்களிடத்திலும் ஃபித்ரா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரி டி.என்.டி.ஜே தனிக் குழு ஒன்றை அமைத்து மர்கஸில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வீடு வீடாக சென்று அதை விநியோகித்தல், மக்கள் அதிகமம் நடமாடும் இடங்களில் ஃபித்ராவின் முக்கியத்துவத்தை உணர்த்தி பிரச்சாரம் செய்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.