குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் – மீட்பு பணியில் குமரி TNTJ

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 9-12-2010 அன்று மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் வெள்ளத்தால் நிரம்பி வெளியூரிலிருந்து குமரிக்கும் இங்கிருந்தவர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தை திருவனந்தபுரத்துடன் இணைக்கும் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் இருப்பதே தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மாவட்டத்தின் கிழக்கு பகுதியான நாகர்கோவில் – கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரம் ஆறு நிறைந்ததால் கன்னியாகுமரி சாலை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளக்காடாக காட்சியளித்தது. சுசீந்திரம் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மின்சாரமும் நிறுத்தப்பட்டது. குளங்கள் நிறைந்து உடைந்ததால் அக்கரையில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கின. மக்கள் அச்சத்துடனே மொட்டைமாடிகளில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் இருந்தவர்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்யாண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

உடனே கலத்தில் இறங்கிய குமரி மாவட்ட TNTJ . மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மீட்பு குழு அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் வண்ணம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.