குமரியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் கடந்த 29-8-2010 அன்று மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் மாணவர் அணி செயலாளர் சகோ.அப்துல் மன்னான் தலைமை தாங்கினார்கள். டி.என்.டி.ஜேயின் மாநில செயலாளரான சகோ.காஜா நூஹ் அவர்கள் குமரி மாவட்டத்தில் மாணவர்களின் எழுச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாவட்ட தலைவர் சகோ.ஜலீல் நன்றியுரையாற்றிய பின் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அரங்கம் நிறையுமளவிற்கு ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!