குடந்தையில் நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட தாயிக்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

20022010(014)20022010(017)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தாயிக்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 20.02.10 சனிக்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள்.  மேலும் இதில் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களிடம் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்பதை மாநிலத் தலைவர் அவர்கள் விரிவாக விளக்கினார்கள். இந்நிகழ்ச்சி குடந்தையில் உள்ள மாவட்ட மர்க்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைப்பெற்றது.