கீழக்கரை தெற்கு தெருவில் கோடை கால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த 26-4-2010 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 5-5-2010 வரை இவ்வகுப்புகள் நடைபெறும். இதில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் பங்குபெற்றமாணர்வர்களுககு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி மற்றும் துஆக்களின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆண்களுக்கு சகோதரர்: கமாலுதீன் மன்பஈ, முஹம்மது மக்தூம் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். பெண்களுக்கு சகோதரி: யாஸ்மின் ஆலிமா மற்றும் ஆயிஷா உம்மாள் ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!