கீழக்கரையில் ஊராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை கிளைகள் சார்பாக தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 500 பிளாட் கவுன்சிலர் ஆகியோரை கண்டித்து கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே கடந்த 29-7-2011 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர்

500 பிளாட் மற்றும் அதன் சற்று பகுதிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைக்க கோரியும் குடிநீர் சாலை சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கேட்டும் பொறுப்பு ஏற்ற நாள் முதல் இப்பகுதிகளை புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்