கிழக்குத்தெரு கிளை தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கிழக்குத்தெரு கிளையின் சார்பாக கடந்த 23-10-2010 சனிக்கிழமை அன்று தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் “நிர்வாகிகளின் பண்பு” என்ற தலைப்பில்  தாவூத் கைசர் உரையாற்றினார். கிளை உறுப்பினர்களின் நிர்வாகம் சம்பந்தமான கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் நவ்சாத் பதிலளித்தார்.

இரவு 7.00 மணி 9.00 முதல் மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கு கொண்டு பயனடைந்தனர்.