கிளியனூரில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை  வடக்கு மாவட்டம் கிளியனூரில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கடந்த 23-4-2010 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு A.நிஜாமுதீன் கிளைத்தலைவர்  தலைமை தாங்கினார்கள் மேலும் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள்
முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சகோ.M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில சிறப்புரையாற்றினார்கள். மேலும் மாநிலச் செயலாளர் சகோ.ஹாஜா நூஹ் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.