கிறித்தவர்களிடத்தில் அழைப்பு பணி செய்வது எப்படி? – சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கடந்த காலங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – காஞ்சி மேற்கு மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் கிறித்தவர்களை தஃவா ரீதியாக எதிர்கொள்வது எப்படி?
அவர்களிடம் எப்படி பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி முறையான பயிற்சி வகுப்பு தலைமையின் சார்பாக நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் கலீல் ரசூல், சகோதரர் சையது இப்ராஹீம் ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்திருந்தனர்.
ஆர்வமுள்ள நம் ஜமாஅத் சகோதரர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை அது பெற்றிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்..
அது போன்ற பயிற்சி வகுப்புகள் மீண்டும் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என சில மாவட்டங்கள் கோரிக்கை வைத்ததையொட்டி
சென்னை, திருவள்ளூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள நம் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மற்றும் கிறித்தவ தஃவா களத்தில் ஆர்வமுடைய நம்  சகோதரர்கள் பயன்பெறும் வகையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வருகிற நவம்பர் 11, 12 (சனி, ஞாயிறு) இரண்டு நாட்கள் கிறித்தவம் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பை மாநிலத் தலைமை நடத்தவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெறும்.
மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஆர்வமுள்ள சகோதரர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உணவு, தங்கும் வசதி இலவசம்.
ஏனைய மாவட்டங்களில் கிறித்தவர்களின் தாக்கம், முஸ்லிம்களிடையே அவர்களின் பிரச்சார குழப்பம் போன்றவை இருக்கிறது என்று கருதினால் அம்மாவட்ட நிர்வாகிகள் தலைமையை தொடர்பு கொண்டால் அத்தகைய மாவட்டங்களிலும் இந்த கிறித்தவம் தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் முறைப்படி அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.S. சைய்யது இப்ராஹீம்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்