மேட்ச் பிக்ஸிங் சம்பந்தமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களின் சக வீரரான யாசிர் ஹமீது பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளும் மேட்ச் பிக்ஸிங் மூலமே முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாளிதழக்கு அளித்த பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனை பெரிதாகத் துவங்கியதும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் இதற்கான வீடியோ ஆதராத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது:
யாசீர் அஹ்மத் பேட்டியின் நேரடி வீடியோ காட்சி
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசிர் ஹமீது இதில் அனைத்து ஆட்டங்களின் முடிவுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் தான் நன்றாக விளையாடி வெற்றி பெற போராடும் போது பிறர் வேண்டுமென்றே தோல்விக்காக போராடுவது தனக்கு கோபத்தை ஏற்படுத்துவாக இருக்கும். ஒரு ஆட்டத்தில் சரியாக விளையாடாமல் இருப்பதற்காக 2,32,000 டாலர் வரை தயாராக இருந்ததாகவும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் இந்த வீடியோவில் மேலும் அவர் கூறியுள்ளார்கள்.
போட்டியில் வெற்றி பெற விஷேச பிரார்த்தனைகளெல்லாம் செய்யும் கிரிகட் ரசிகர்கள், கிரிகட் வீரர்கள் பணம் வாங்கிக் கொண்டு படுதோல்வி அடைகின்றார்கள் என்பதை தெரிந்து கொண்டு இனிமேலாவது பணத்தையும் நேரத்தையும் வீணாக்கமல் இருப்பார்களா?