காவல் துறையின் அத்துமீறலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்கள் வீட்டில் அத்து மீறி நள்ளிரவில் புகுந்து சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் ஆடியுள்ளது மதுரை மாவட்ட கவல்துறை:

வெறியாட்டம் போட்ட திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரைக் கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் செயல்பாடுகள் மிக வீரியத்துடன் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே! வந்தே மாதரத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை மாவட்ட இந்து முன்னனியினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் மதுரை மாவட்டம் கொடுத்த பதிலடியாகட்டும்,

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அறிவித்த முற்றுகை போராட்டமாகட்டும், தங்களது வீரியமிக்க போராட்டங்கள் வாயிலாக கவல்துறை கிடுகிடுக்க வைத்துள்ள டி.என்.டி.ஜே. வின் மதுரை மாவட்ட நிர்வாகிகளை பழிவாங்கும் தீய நோக்கத்தில்,

கடந்த 11.01.2010 அன்று நள்ளிரவு 12 மணிக்கு டி.என்.டி.ஜே மதுரை மாவட்ட செயளாலர் ஹெச்.சாகுல் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்த கவல்துறையினர் உங்களது வீட்டை ரைடு செய்ய வேண்டும் என்று கூறி வெறியாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த அவரது மனைவி மற்றும் அவரது தாயரை அழைத்து இந்த பெண்களெல்லாம் யார்? என்று கேட்டு கொச்சைப் படுத்தியுள்ளனர். மேலும் அவரது வீட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள பொருட்களைக் கலைத்து உங்களது வீட்டில் வேரு என்ன என்ன பொருட்களை எங்கு எங்கு வைத்துள்ளீர்கள் என்று ஒரு தீவிர வாதியை விசாரிப்பது போன்று விசாரித்துள்ளனர்.

மேலும் அவரது வீட்டிலிருந்த பீரோவில் இருந்த பொருட்களையும் ரைடு என்ற போர்வையில் துளாவிப்பார்த்துள்ளனர்.

ஏதோ ரைடு என்ற போர்வையில் நடுச்சாமத்தில் வந்து பூச்சாண்டி காட்டினால் முஸ்லிகள் பயந்து விடுவார்கள் என்று நினைத்துவிட்டனர் போலும் அந்த தரக்கெட்ட டி.எஸ்.பி மயில்வாகனனும் அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தியும்.

ஆனால் தமிழகத்தில் இரத்தம் சிந்தி தவ்ஹீதை வளர்த்த நமது ஏகத்துவ சகோதரர்களின் வரலாறு தெரியாத மடையர்கள் ”சீப்பை ஒழித்துவிட்டால் கல்யானத்தை நிறுத்திவிடலாம்” என்று கூறுகெட்ட ரேஞ்சுக்கு யோசித்து, இந்த கேடுகெட்ட நள்ளிரவு ரைடை நடத்தியுள்ளனர்.

ஒவ்வொரு டிசம்பர்-6 களின் போதும் நள்ளிரவுவேளைகளில் முஸ்லிம்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பெயபெயரில் வெறியாட்டம் போட்ட காவல்துறையினரின் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசப்போக்கை மதுரையிலிருந்து ஆரம்பிப்பதற்கான அடையாளமாகவே டி.என்.டி.ஜே மதுரை மாவட்ட செயளாலரின் வீடு நள்ளிரவில் சோதனையிடப்பட்ட சம்பவம் உணர்த்துகின்றது

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், இனிமேல் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரனுடைய வீட்டிலும் கவல்துறையின் இது போன்ற பெட்டைத்தனமான அராஜகம் நடந்தேறிவிடக்கூடாது என்ற தொலைநோக்கோடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் மதுரை மாவட்டம் தரங்கெட்ட டி.எஸ்.பி. மயில்வாகனனையும், ஆய்வாளர் புகழேந்தியையும் கண்டித்து “மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

முஸ்லிம்கள் விஷயத்தில் அத்துமீறிய ஆணவக்கார காவல்துறையின் அகம்பாவத்தை அடக்க குடும்பத்துடன் வீறுகொண்டு எழவேண்டும். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைவரையும் அன்போடு அழைக்கின்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் மதுரை மாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்ட நாள்: 14-01-2010 இன்ஷா அல்லாஹ்…..
இடம்: அண்ணாசிலை, நெல்பேட்டை அருகில், மதுரை.
நேரம்: காலை 10.30 மணிக்கு
கண்டன உரை: சம்சுல்லுஹா ரஹ்மானி- TNTJ மேலண்மைக்குழு தலைவர்