காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் MRV நகரில் 10 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களின் சொந்த இடத்தில் மதரசா கட்ட தொடர்ந்து தடையாக இருக்கும் விஷமிகளையும் , அதற்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறை , மற்றும் காவல்துறையை கண்டித்தும் கடந்த 14 / 04 / 12 சனிகிழமை காலை 11 மணியளவில் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் சாதிக் , ஜப்பார் பொது செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரகணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர் ,

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

தினதந்தி உள்ளிட்ட பத்திரக்கைகளில் செய்தி வெளியானது. மேலும் TV செய்திகளிலும் செய்தியாக வெளிவந்தது. அல்ஹம்துலில்லாஹ்

ஆர்பாட்டதிர்கான சிறப்பான ஏற்பாடுகளை சிதம்பரம் TNTJ கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர் ,