“காலத்தை கணக்கெடுப்போம்” கத்தர் மர்கஸ் வாராந்திர பயான்

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.

துவக்கமாக மண்டலப் பேச்சாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள், “காலத்தை கணக்கெடுப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலப் பேச்சாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், ” விருந்தோம்பல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “இஸ்லாத்தில் கேள்வி கேட்டலின் முக்கியத்துவம் “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும்,’அரபி ஆரம்ப நிலை தேர்வு’ எழுதியவர்களின் தரங்களையும் கூறினார்கள்.துணைத் தலைவர் சகோ.ஜியாவுதீன் அவர்கள் சென்ற மாத கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.