காரையூர் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 27.11.2010 அன்று மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தங்கினார்.மாவட்ட செயலாளர் சுல்தான் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர்கள் மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி. மவ்லூது ஓர் ஆய்வு என்னும் தலைப்பிலும் மற்றும் A .முஜாஹித் அவர்கள் TNTJ சாதித்தது என்ன? என்ற தலைப்பிலும் நஸ்ரத் ஆலிமா இஸ்லாமிய பெண்களின் இன்றைய இறையச்சம் என்னும் தலைப்பில் உரைஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் முன்னின்று நடத்தினர் அல்ஹம்துலில்லாஹ!