காஞ்சி மேற்கு குரோம்பேட்டையில் TNTJ வின் புதிய கிளை உதயம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டையில் நேற்று (14.03.2010 ஞாயிற்றுக்கிழமை)  தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை துங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் ஷேக் ஃபரீத், மாவட்ட து. செயலாளர் காஜா மற்றும் மாவட்டத்தின் பிற கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட பேச்சாளர் கமாலுதீன் மன்பஈ அவர்கள் TNTJ வின் அரும்பணிகள் மற்றும் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் ஆகிய தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் புதிய கிளையின் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.