கொலையாளியை கண்டுபிடிக்காத காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அப்துல் ஹமீத் என்வரின் மகன் சாகுல் ஹமீத் என்பவர் தனியார் பொறியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை யாரோ சில சமூக வீரோதிகள் தாக்கியுள்ளனர் கடும் தாக்குதலுக்குள்ளான சாகுல் ஹமீத் சிகிச்சை பலனின்றி கடந்த 27-8-2010 அன்று உயிரிழந்தார்.

கொலையாளிகைள இதுவரையில் காவத்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. கொலையாளியை கண்டுபிடிக்க தவறிய காவல்துறையை கண்டித்தும், வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்றக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் கடந்த 20-9-2010 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. பின்னர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இத தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.