அரசுப் பள்ளி தொடர்பாக கலக்டரிடம் வேலூர் TNTJ நிர்வாகிகள் நேரடி மனு!

பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு அரசு உருது வழி ஆரம்ப பள்ளி தொடங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐந்தாண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தது. அதன் முயற்ச்சியாக பேரணாம்பட்டு ஒன்றியம் ஏர்குத்தி ஊராட்சி காயிதே மில்லத் நகரில் 21-07-2010 அன்று அரசு உருது ஆரம்ப பள்ளி தொடங்க அரசாணை பிறப்பித்தது.

தற்போது தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது சுமார் 30 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதைப் போல் பேரணாம்பட்டு சிவராஜ் நகரிலும் தமிழ் வழி ஆரம்ப பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவ்விரு பள்ளிகளும் பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் முட்டை வழங்குவதில்லை, இதனால் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு இவ்விரு பள்ளிகளிலும் மதிய உணவுடன் முட்டை வழங்கவும், நிரந்தர பள்ளி கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு மாவட்ட ஆட்சியாளர் திரு. ஊ. ராஜேந்திரன் அவர்களை TNTJ நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் திரு. ஊ. ராஜேந்திரன் அவர்களை TNTJ நிர்வாகிகள் சந்தித்த போது சகோ. P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்முள்ள கேள்விகளும், அறிவிப்பூர்வமான பதில்களும் போன்ற  நூல்கள் கலக்ட்டருக்கு வழங்கப்பட்டது. அன்பளிப்பை பெற்ற மாவட்ட ஆட்சியாளர் TNTJ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!