கர்நாடக TNTJ மர்கஸில் வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம்

DSC01116கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் வாரந்தோறும் TNTJ மார்க்க அறிஞர்கள் மற்றும் தாயிகளை கொண்டு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக சென்ற வாரம் 08.01.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கர்நாடக TNTJ வின் செயலாளர் சகோதரர்:முஹம்மத் கனி “இஸ்லாம் கூறும் எளிமை திருமணம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தமது உரையில் வரதட்சணையின் தீமைகளை பற்றியும், ஒரு இறை நம்பிக்கையாளர் எவ்வாறு இந்த தீமையை ஒழிக்க வேண்டும் என்றும், தமது திருமணத்தை நபி( ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் தான் அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் குர்ஆண் -ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார். மேலும் இன்றைய சமுதாய அமைப்பில் வரதட்சனை ஏற்படுத்தும் விளைவுகளையும், இதன் மூலம் இஸ்லாமியகள் மீது எழும் குற்றச்சாட்டுகளையும் பட்டியல் இட்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ் வரும் வாரத்தில் இருந்து ஞாயிற்று கிழமைக்கு பதிலாக வெள்ளி தோரும் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெறும். தொடர்புக்கு Click Here