கர்நாடக மாநிலம் டும்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

Image0118

Image0108தமிழகத்தை தொடர்ந்து அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கர்நாடகாவிலும் ஏகத்துவ தீ பரவி வருகிறது. மாற்று மொழி மாநிலமாக இருந்தும் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் ஏகத்துவ கொள்கையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இதன் பிரதிபலிப்பாக, பெங்களூர்,மைசூர், கோலார் தங்க வையல், ஷிமொகவை தொடர்ந்து டும்கூர் மாவட்டத்திலும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) புதிய கிளை உதயமாகியுள்ளது. இதற்கு முன் TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் தமிழர்கள் அதிகமாக வாழும் பஜார் பகுதியில் சென்ற மாதம் சொற்பொழிவு ஆற்றினார்.

அதே போல் சென்ற ரமலானிலும் TNTJ மாநில பேச்சாளர் மௌலவி: தமீம் MISc அவர்களை கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 8/11/2009 அன்று KTJ டும்கூர் மாவட்ட நிர்வாகிகள் மார்க்க விளக்க சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் TNTJ மாநில பேச்சாளர் சகோதரர்: இஸ்மாயில் அவர்கள் “ஏகத்துவத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தமது உரையில் ஏகத்துவத்தின் இலகனதையும், அல்லாஹ்வின் பார்வையில் எதுவெல்லாம் இனைகர்பிப்பு என்றும், ஏக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மிக எலுமையாக எடுத்துரைத்தார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் மக்களின் ஆர்வத்தை பார்த்து KTJ டும்கூர் மாவட்ட நிர்வாகிகள் மாதத்தில் ஒரு முறையாவது தமிழகத்திலிருந்து TNTJ தாயிகளை கொண்டு பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.