கர்நாடக பிரதேச TNTJ வின் பொதுக்குழு கூட்டம்!

கர்நாடக பிரதேச TNTJ வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 09042010 அன்று கர்நாடக தலைநகரம் பெங்களூரில் அமைந்துள்ள BIFT ஹாலில் காலை 11 மணி அளவில் கூடியது.

இக்கூட்டத்திற்கு TNTJ மாநில பொதுச் செயலாளர் சகோதரர்:அப்துல் ஹமீது அவர்கள் மாநிலத் துனைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் தலைமை தாங்கினார். பெங்களூரு, ஷிமோகா,மைசூர், தும்கூர் மற்றும் கோலார் தங்க வயல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருந்தனர்.

பொதுச் செயலாளரின் தலைமை உரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் தத்தமது ஆண்டு அறிக்கையை வாசித்தனர். மேலும் கர்நாடக பகுதியில் அமைந்துள்ள 5 மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக இனி வரும் காலங்களில் கர்நாடக பிரதேச TNTJ என்று செயல் படவேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதன் பின் நடைபெற்ற தேர்தலில் கீழ் காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்:

கர்நாடக பிரதேச TNTJ
தலைவர் : S.A. சுலைமான்
துணைத் தலைவர் : அப்துல் ஹமீது
செயலாளர் : A.முஹம்மத் கனி
பொருளாளர் : K.A. சித்திக்
துணைச் செயலாளர்கள் : அப்துல்லாஹ்
சலீம்

மேலும் இப்பிரதேச நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்குள் கர்நாடகாவில் செயல் படும் 5 மாவட்டங்களிலும் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து TNTJ மாநிலத் துணைத் தலைவர்: கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஜ்ஜமாஅத்தின் செயல்பாடு எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் எழுச்சி உரை ஆற்றினார். ஜும்மா தொழுகையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.