கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நடைபெற்ற முதல் உருது சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நடைபெற்ற முதல் உருது சொற்பொழிவு நிகழ்ச்சிகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நடைபெற்ற முதல் உருது சொற்பொழிவு நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) அங்கமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் (KTJ) தலைமையகத்தில் வாரவாரம் TNTJ மார்க்க அறிஞர்களை கொண்டு வாராந்திர பயான் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 26.07.2009 அன்று பெங்களுரில் அமைந்துள்ள உள்ள KTJ தலைமையகத்தில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் KTJ வின் செயலாளர் முகம்மது கனி அவர்கள் ”சோதனைகள் ஏற்படும் போது” என்ற தலைப்பில் தமிழில் உரையாற்றினார்.

மேலும் TNTJ மாநில போச்சாளர் மௌலவி நாசர் உமரீ அவர்கள் கலந்து கொண்டு “ஹஜ்மத்தே ஸஹாபா – ஸஹாபாக்களின் சிறப்பு” என்ற தலைப்பில் உருது மொழியில் உரையாற்றினார்கள். இதில் ஸஹாபாக்களின் தியாகங்களை எடுத்து காட்டி, நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதையும் விளக்கி, நாமும் ஸஹாபாக்களை போன்று தியாக சீலர்களாக மாற வேண்டும் என்பதை அளகாக எடுத்துரைத்தார்கள். பின்னர், கேள்விகளுக்கு நாசர் உமரி அவர்கள் பதில் அளித்தார்கள்.

இதில் நூற்றுக்கும் மேல் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பெங்களுரில் TNTJ நடத்திய முதல் உருது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை பெங்களுர் மாவட்டம் KG ஹள்ளி கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர்.