கர்நாடகாவில் 3 இடங்களில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை!

கர்நாடக TNTJ வின் சார்பாக இந்த ஆண்டு 3 மாவட்டங்களில் நபி வழி பெருநாள் தொழுகை நடைபெற்றது.

பெங்களுரு:

KG ஹல்லியில் அமைந்துள்ள அமீர் சாதி மஹாலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் மௌலவி: முஹம்மத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 250 பெண்கள் உட்பட சும்மார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

ஷிமோகா:
அல்-முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் சகோதரர்: சுல்தான் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார். இதில் சும்மார் 100  பெண்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மைசூர்:
ஹிலால் பள்ளி திடலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் சகோதரர்: கோவை சகாபுதீன் அவர்கள் உரையாற்றினார். இதில் ஏராளமானோ கலந்துக் கொண்டனர்