கர்நாடகாவில் நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்!

ktj_sayarkuluதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் (TNTJ) அங்கமாக செயல்பட்டுவரும் கர்நாடக தவ்ஹீத் ஜமாத் (KTJ) வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், 06.04.2009 அன்று நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் செயற்குழுவில், கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டால், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் பி.ஜே.பி யை வீழ்த்த காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பது சிறந்தது என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடக தவ்ஹீத் ஜமாத்துடன் சந்தித்து பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் MP ஜஃபர் சரீஃப் மற்றும் சில MP க்களும் அழைப்புவிடுத்தனர். இதன் அடிப்படையில் கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் பொருளாளர் முஹம்மது சலீம், செயலாளர்கள், முஹம்மது கனி மற்றும் சைபுதீன், பெங்களுர் தலைவர், சித்தீக், பெங்களுர் செயலாளர்களான, சலீம், அப்துல்லாஹ் மற்றும் வசீம் ஆகியோர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், திரு. தேஷ்பாண்டே அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்கள் ஆதரிப்பது என்ற முடிவை தெரிவித்து, பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமேன வலியுறுத்தினர்,

1. சச்சார் கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2. புரண மது விலக்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
3. கலவரங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் என்பதால், காங்கிரஸ் எற்கனவே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தனி கலவர தடுப்பு படை அமைக்கப்பட வேண்டும். மேலும், அதில் 50 சதவிதத்தினர் சிறுபான்மை சமுகத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
4. ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு வட்டியில்ல கடன் வழங்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை ஏற்ற திரு. தேஷ்பாண்டே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமைக்கு சிபாரிசு செய்வதாக வாக்குறுதியளித்தார்.