கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் பயான்

கருணைமிக்க அல்லாஹ் ரமலானில் நன்மைகளை வாரி வழங்குவதால் அதை அள்ளிச்செல்லும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக கடந்த 01-09-10 அன்று காலை 11 மணிக்கு ரஹ்மத் கார்டன்ஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்கவுரையாற்றிய ஆமினா ஆலிமா அவர்கள் ‘ரமலான் நமக்கு தரும் பாடம்’ எனும் தலைப்பில் பேசினார்.

அடுத்த உரையாற்றிய ஸாஜிதா ஆலிமா அவர்கள் ‘லைலத்துல் கத்ரின் சிறப்புகளும் அதை அடைவதற்கான முயற்சிகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள், வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.