கந்தூரி விழாவை கண்டித்து மேலப்பாளையத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 20.03.2010 சனிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு சமாயினா ஷேக் மூப்பன் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நகர நிர்வாகிகள் தலைமை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழு தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி, இறை திருப்தி தருமா இரவு ராத்திபுகள் என்ற தலைப்பில், பொட்டல்புதூர் கந்தூரியில் நடைபெறும் அனாச்சாரங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். பொட்டல்புதூர் கந்துரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

எஸ்.ஒய். மஸ்ஊத் யூசுபி, நாங்கள் சொல்வது தவறா? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். நூற்றுக்கணக்கானோர் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.