கத்தர் மர்கஸ் சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற புத்த குடும்பம்!

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைப்பொதுச்செயலாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டலப் பேச்சாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் “வஹீயை மட்டும் பின்பற்றுவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டலப் பேச்சாளர் சகோதரர், தஸ்தகீர் அவர்கள் “பாவமன்னிப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் “இறுதிப்பயணம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து,இலங்கையைச் சார்ந்த ஒரு புத்த மத சகோதரர் ,அவரது மனைவியுடன் சேர்ந்து ,இஸ்லாத்தை தழுவினார்கள்.அவர்களுக்கு, மண்டலப் பேச்சாளர் மௌலவி,அன்ஸார் அவர்கள்இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.