கத்தர் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 12-5-11 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  செயலாளர் சகோ.அப்துல் பாசித் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.  டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள்,”நபித்தோழியர் வரலாறு “என்ற தொடர் தலைப்பில் “அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)” அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

பின்னர் மௌலவி. அன்சார் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
பின்னர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “சபிக்கப்பட்டவர்கள் ” என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆண்களும்,பெண்களும்,சிறார்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான “தர்பியா” நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.

இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன.

பின்னர் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது