கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 28-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்து. இதில்

பள்ளி மாணவர் முஹம்மத் ஜியாவுதீன், “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார்.
அன்சார் மஜீதி அவர்கள் “ரமலானும் ஈமானும்” என்ற தலைப்பிலும், அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “சம்பவங்கள் முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு “கேள்வி – பதில்” நிகழ்ச்சியை முஹம்மத் அலீ MISc மற்றும் முஹம்மத் தமீம் MISc அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த சகோதர-சகோதரிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

மண்டலச் செயலாளர் M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக மண்டலத் தலைவர் Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் வரவிருக்கும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும்,அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் தருமாறும் அறிவிப்பு செய்தார்கள்.